தன் 85 வயது தாயைத் தாக்கியதாகக் கதறிய பாஜக தொண்டரே தன் தாயை அடித்து உதைப்பவர்தான்!

மேற்கு வங்கத் தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இரைப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு பரகனாவில் பாஜக தொண்டரையும், அவரது தாயாரையும் திரிணாமுல் தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.

ஆனால் தற்போது கதறும் இந்த பாஜக தொண்டரின் உறவினரே பாஜக தொண்டரே தன் தாயைக் கண்டபடி ஏசியும் பேசியும் அடித்து உதைப்பவர்தான் என்று பாஜக தொண்டரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார்.

85 வயது தாயார் ஷோவா மஜூம்தார் இவரது மகன் கோபால் மஜூம்தார், இவர்கள் 24 வடக்கு பரகனாவில் வசித்து வருகின்றனர். சனிக்கிழமையன்று சில விஷமிகள் வீடு புக்குந்து தாயாரையும் மகனையும் சிலர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் இப்படிச் செய்தனர் என்று இவர் கதறினார்.

அதாவது முகமூடி அணிந்த மூவர் தன் வீட்டுக்குள் புகுந்து தன்னையும் தன் தாயாரையும் தாக்கியதாக அவர் தெரிவித்தார். அவர்கள் தான் பாஜக தொண்டர் என்பதற்காக கெட்ட கெட்ட வார்த்தைகளினால் திட்டினார்கள் என்றும் கூறுகிறார் கோபால் மஜூம்தார். அதனால் இவர்கள் திரிணாமுல் கட்சியினர்தான் என்று குற்றம்சாட்டுகிறார்.

தாயாரும் தன் மகன் பாஜகவில் இருப்பதால் தாக்கப்பட்டான் என்று கூறினார். என்னாலும் நடக்க முடியாது, படுத்த படுக்கையாக இருக்கும் என்னை அடிக்கின்றனர் என்று இந்தியா டுடே டிவியில் அவர் கூறினார்.

இவ்வாறு தாயும் மகனும் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் மேல் பழியைப் போட இந்தக் கதையில் புதிய திருப்பமாக, 85 வயது மூதாட்டியின் பேரன் கோவிந்து, தன் பாட்டி நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருக்கிறார், என்றும் இது திரிணாமுல் வேலையல்ல, குடும்பத்தகராறுதான் காரணம், மேலும் தாக்கியது பாஜக தொண்டர்கள்.

இந்நிலையில் இவ்வாறு குட்டை உடைக்கும் பேரனின் மனைவி இந்தியா டுடே டிவியில் கூறும்போது, 85 வயது தாய் ஷோவா மஜூம்தார் நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்பவர்தான், கோபால் மஜூம்தார் தன் தாயையே அடித்து உதைப்பார், அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்குத்தான் பாட்டி வந்து அழுவார், என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தொண்டர்களே பாஜக தொண்டரை ஏன் அடிக்க வேண்டும், அதுவும் 85 வயது மூதாட்டியை ஏன் தாக்க வேண்டும் என்பது அந்த வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.