ஆசை ஆசையாக ‘ஐபோன்’ வாங்கிய இளம்பெண்.. ‘சரி பாக்ஸை ஓபன் பண்ணுவோம்’.. காத்திருந்த அதிர்ச்சி..!

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த லியு (Liu) என்ற இளம்பெண் ஆப்பிள் ஐபோன் இணையதளத்தில் iPhone 12 Pro Max என்ற புதிய ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான தொகை 1,500 டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 1,10,142) ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து ஒரு நாள் லியுக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

உடனே ஆசை ஆசையாக ஐபோன் பாக்ஸை பிரித்துள்ளார். ஆனால் அதற்கு உள்ளே ஆப்பிள் ஜூஸ் இருந்ததைக் கண்டு லியு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து வீடியோ எடுத்து சீன சமூக வலைதளமான Weibo-ல் பதிவேற்றியுள்ளார்.இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் ரூ. 55,000 மதிப்புள்ள iPhone 8 செல்போனை ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருந்தவருக்கு, செல்போன் பாக்ஸில் சோப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் இணையத்திலேயே ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் வந்தது குறித்து அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.