படு பங்கரமான லேசர் துப்பாக்கியை தயாரித்துள்ள அமெரிக்கா: எதனையும் சுட்டு வீழ்த்த வல்லது !

இதுவரை எதிரி நாடுகள் தயாரித்து வைத்திருக்கும் லேசர் துப்பாக்கிகள் அனைத்தையும் விட, மேலதிகாமக சுமார் 50% விகிதம் திறன் கொண்ட பாரிய லேசர் துப்பாக்கி ஒன்றை அமெரிக்கா தனது கடல் படை கப்பலில் சமீபத்தில் பொருத்தி உள்ளதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது. லேசர் துப்பாக்கிகளை பொறுத்தவரை எந்த அளவு திறன் கொண்ட துப்பாக்கிகளை பயன் படுத்த முடியும் என்ற ஒரு வரையறை சர்வதேச சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை தாண்டி மிகவும் சக்திவாய்ந்த ஒரு லேசர் துப்பாக்கியை அமெரிக்கா பயன்பாட்டில் வைத்துள்ளது என்று சீனா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது. பல மைல் தொலைவுக்கு சென்று தாக்க வல்ல இந்த லேசர் கதிர்கள். இரும்பையும் ஊடறுக்க வல்லவை. இதனால் எதிரி நாட்டு கப்பல்களை துவம்சம் செய்ய மற்றும், எதிரி நாட்டு போர் விமானங்களை நடு வானில் தாக்கி அழிக்க லேசர் துப்பாக்கிகளால் இலகுவாக முடியும். மேலும் இதில் தோட்டாக்களோ இல்லை குண்டுகளோ இல்லை.

வெறும் பாரிய மின்சாரம் மட்டும் இருந்தால் போதும். லேசர் கதிர்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டு இருக்க முடியும்.