இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மொத்தமாக முறியடித்த சிரியா: வியப்பில் உள்ளது உலகம் ஏன் தெரியுமா ?

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலை மொத்தமாக முறியடித்துள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது. 2011 ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால், முக்கியமாக ஈரானிய மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா படைகள் மற்றும் சில அரசாங்க படைகளையே இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்துள்ளது.

மேலும், இஸ்ரேலின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலானது சிரியாவில் ஈரானின் விரிவான இராணுவ பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன என்றே மேற்கத்திய நிபுணர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களை மிக சாமர்த்தியமாக முறியடித்துள்ளதாக சிரியா அறிவித்துள்ளது. சிரியாவில் ஈரான் ஆதரவு போராளிகளை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது முதல் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் செல்லப் பிள்ளை, மற்றும் தொழில் நுட்ப்பத்தில் மிகவும் வளர்சியடைந்த நாடு என்று கருதப்படும் ஸ்ரேல் ஏவிய அனைத்து ஏவுகணைகளையும் வானில் வைத்தே வெடிக்கவைத்து விட்டது சிரிய ராணுவம். இந்த அளவு அவர்கள் தொழில் நுட்ப்பம் எப்போது வளர்ந்தது என்பது தான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.