ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” – ஹாடீஜா ஜெங்கிஸ்

அது நாங்கள் கோரும் நீதியாக மட்டுமல்ல… இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் செயலாகவும் இருக்கும்” என ஹாடீஜா ஜெங்கிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு ஓப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியான பிறகு ஹாடீஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அமெரிக்க புலனாய்வு அறிக்கையை செளதி மறுத்துள்ளது.அதேபோல செளதி இளவரசர் கஷோக்ஜியின் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜமால் கஷோக்ஜி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் செளதி அரசுக்கு ஆலோசகராக இருந்த, 59 வயதான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, செளதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 2018 அக்டோபரில் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் இருக்கும் செளதி அரேபிய தூதரகத்துக்கு, தன் வருங்கால மனைவியை (துருக்கில் நாட்டைச் சேர்ந்தவர் இவர்) மணந்து கொள்வது தொடர்பாக சில அரசுப் பத்திரங்களைப் பெறச் சென்றார்.

அந்த சமயத்தை பயன்படுத்திய செளதி புலனாய்வு துறை, அவருக்கு அளவுக்கு அதிகமான ஒரு மருந்தை கொடுத்து கொலை செய்து. பின்னர் துண்டு துண்டாக வெட்டி, அந்த பாகங்களை செளதிக்கு எடுத்துச் சென்று முடிக்குரிய இளவரசருக்கு காட்ட முனைந்துள்ளார்கள். ஆனால் உள்ளே சென்ற ஜமால் திரும்பவில்லை என்ற செய்தி, மிக மிக வேகமாக பரவியதால், அவரது உடலை ராஜதந்திரிகள் பயணிக்கும் வாகனத்தில் ஏற்றி , உள்ளூரிலேயே புதைத்துவிட்டார்கள்.

ஜமால் கஷோக்ஜியை செளதிக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்ட செளதி உளவுப் படை அதிகாரிகள் நடத்திய ஒரு ஆபரேஷனில், அவர் கொல்லப்பட்டதாகக் கூறியது செளதி அதிகாரிகள் தரப்பு. அதில் தொடர்புடைய ஐந்து பேருக்கு, செளதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில், முதலில் மரண தண்டனை வழங்கியது. அதன் பின் அவர்களது தண்டனையை 20 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.