அக்டோபர் மாதம் வரை பார்ஃலோவை நீடித்துள்ள சுண்ணக்: மாதம் 5 பில்லியன் செலவு !

பிரித்தானியாவில் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடி, 80% சதவிகிதத்தை சம்பளமாகப் பெறும் திட்டத்தை அக்டோபர் மாதம் வரை நீடித்துள்ளதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பை திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக் சற்று முன்னர் உறுதிப்படுத்தி உள்ளார். பார்ஃலோ என்று அழைக்கப்படும் இந்த திட்டம் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்களே வேலைக்கு செல்ல முடியவில்லை என்றால், உங்கள் வியாபார தள உரிமையாளர் உங்களுக்கான சம்பளத்தின் 80 சத விகிதத்தை கொடுக்க வேண்டும்.

அதனை அவர் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் மாதம் தோறும் சுமார் 5 பில்லியன் பவுண்டுகள் துண்டு விழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக கடந்த ஆண்டில் 46 பில்லியன் பவுண்டுகளை இவ்வாறு பிரித்தானிய அரசு இழந்துள்ள நிலையில். Source GOV : Rishi Sunak is to extend £5billion-a-month furlough scheme to OCTOBER in today’s Budget as he vows to do ‘whatever it takes’ to rescue economy after a year of lockdown pain.

கொரோனா கால கட்டங்களில் பெரும் லாபத்தை ஈட்டிக் கொண்டு இருக்கும் டிலிவரி கம்பெனிகள், மற்றும் மேலும் சில கம்பெனிகளின் வரிகளை சற்று அதிகரித்து. அதனூடாக துண்டு விழும் 46 பில்லியன் பவுண்டுகளை ஈடு கட்ட ரிஷி சுண்ணக் புதிய டாக்ஸ் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளார் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.