தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’!.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல?’.. மண்டபத்தில் காத்திருந்த ‘மணமகன்’ வீட்டாருக்கு தெரியவந்த அதிர்ச்சி..!

சென்னையில் மணமகன் வீட்டார் கல்யாண மண்டபத்தில் காத்திருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்பரம்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்துள்ளது. இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நசரத்பேட்டையில் உள்ள மண்டபத்தில் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. மண்டபத்தில் மணமகனும், அவரது வீட்டார் மட்டும் இருந்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக மணப்பெண்ணின் வீட்டில் இருந்து யாரும் மண்டபத்துக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார், பெண் வீட்டாரிடம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போதுதான் மணப்பெண் மாயமான விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் மணமுடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென புகார் அளித்துள்ளனர். மண்டபத்தில் மணமகன் காத்திருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.