‘கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்…’ ‘உறுதியான கூட்டணி…’ – அறிவித்த கட்சியின் தலைவர்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தற்போது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று நடந்த சமத்துவ மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து பேசிய அவர் மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும்.

கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம். மக்களுக்காக சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக சிந்திக்க கூடாது. சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும் எனத் தெரிவித்தார். கடந்த வாரம் கமலை சந்தித்து கூட்டணி குறித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.