கொடுப்பது போல கொடுத்து இனி TAX அதிகரிக்க உள்ளது அரசு: 260 பவுண்டுகள் மேலதிக செலவு !

தற்போது பிரித்தானியா சுமார் 2.8 ரில்லியன் பவுண்டுகள் கடனில் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. வர்த்தகர்களுக்கு வழங்கிய 50,000 பவுண்டு கடன், கவுன்சில் இனாமாக கொடுத்த 10,000 ஆயிரம் பவுண்டுகள், மேலும் பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்ட பார்ஃலோ, என்று வாரி வாரி வழங்கிய பிரித்தானிய அரசு. தற்போது கடும் கடன் சுமையில் உள்ளதால். மக்களிடத்தில் வரிப்பணத்தை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலை செய்து சாதாரண பிழைப்பு நடத்தும் மக்களிடம், வேலைக்கான டாக்ஸை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு வருடத்திற்கு, சாதாரண மக்கள் 2,600 பவுண்டுகளை மேலதிகமாக அரசுக்கு கட்டி இருப்பார்கள். அதாவது சராசரியாக மாதம் எங்களுக்கே தெரியாமல் 260 பவுண்டுகளை நாம் அரசுக்கு ஏதோ ஒரு வழியில், TAX என்ற பெயரில் கட்டி இருப்போம்.

முதலாளித்துவ கட்சி(கான்சர்வேட்டிவ்) இதனை தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்த கான்சர்வேட்டிவ் கட்சி, முதலாளிகளை மேலும் செல்வந்தராக மாற்றும். ஆனால் நடுத்தர மக்களை அப்படியே வைத்திருக்கும். அவர்கள் எந்த வழியிலும் முன்னேற முடியாது. கொரோனா லாக் டவுன் முடிவுக்கு வரும் நிலையில். அந்த வரி, இந்த வரி என்று இருக்கும் வரிகளின் சத விகிதத்தை உயர்த்தி. சாதாரண பொது மக்களிடம் இருந்து காசை கறந்து,  இழந்த திறைசேரி காசை நிரப்பி விடுவார்கள். Source GOV: Rishi’s stealth tax raid: Thresholds freeze will help drive tax burden to highest since the 1960s and drag 2.3million people into higher bands and cost middle earners £2,600 a year.

இதனால் தான் படித்த பலர் தொழில் கட்சிக்கு(லேபர் கட்சிக்கு) வாக்குப் போடுவது வழக்கம். அவர்களே சாதாரண மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தமது திட்டங்களை முன்னெடுத்து வருபவர்கள்.