சாதாரண மக்களின் வங்கிக் கணக்கை ரேய்ட் (ஆராயும்) பிரித்தானிய திறைசேரி- ரிஷி அதிரடி !

பிரித்தானியாவின் திறைசேரி அமைச்சர் ரிஷி நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கை, சாதாரண மக்களிடையே பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அதாவது சாதாரண மக்களின் வங்கிக் கணக்குகள் அவர்களது வருமானங்கள் தொடர்பாக பிரித்தானிய திறைசேரி ஆராயும் என்றும். சேமிப்பையும் வைத்துக் கொண்டு அரச பணத்தை பெற்று வந்தால், அவர்களுக்கு தண்டம் அறவிடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் இதேவேளை பல ஆயிரக் கணக்கான வணிக உரிமையாளர்கள், ஒன்றுக்கு இரண்டு பவுன்ஸ் பாக் லோன்களை எடுத்து பெரும் தில்லாலங்கடி விளையாட்டுகளை காட்டி உள்ளார்கள்.

அது குறித்து ஆராயவில்லையா என்று ரிவீட்டரில் கேட்க்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் கூறியுள்ள திறைசேரி அமைச்சர். தாம் இது தொடர்பாக சுமார் 1,000 விசாரணையாளர்களை நியமிக்கப் போவதாகவும். இதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர்களாகவே பவுன்ஸ் பேக் லோனை அறிவித்தார்கள். போனவர் வந்தவர் என்று அனைவருக்கு வாரி வாரி வழங்கினார்கள். பின்னர் தற்போது அதில் முறை கேடு நடந்துள்ளது என்று விசாரணை போட்டு, மக்கள் வரிப் பணத்தில் 50 மில்லியனை செலவு செய்ய உள்ளார்கள்.

ஒட்டு மொத்தத்தில் லாக் டவுன் முடிவடைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பும் நேரத்தில் பெரும் சுமைகளை பிரித்தானிய அரசு தலையில் இறக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்