‘பார்க்க நல்லா இருக்குதே…’ ‘அப்படின்னு நெனச்சு வாங்கியிருக்காங்க…’ ‘இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு கொஞ்சம் கூட நெனைக்கல…’ – நெட்ல செர்ச் பண்ணி பார்த்தப்போ தான் விசயமே தெரிஞ்சிருக்கு…!

சீனாவின் அரசவம்சத்தை சேர்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணத்தை அமெரிக்கர் ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் கனெக்டிக்கட் (Connecticut,) பகுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த ஒரு கடையில் இருந்த கிண்ணத்தை 35 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த கிண்ணத்தை வாங்கியது முதல் அதன் வடிவமைப்பும், வண்ணமும், அதில் இருந்த கலை வேலைபாடுகளும் அந்த கிண்ணம் விலையுயர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என கருதி இணையத்தில் முழுமையாக அலசி ஆராய்ந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சோத்பே (Sotheby) நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அந்த கிண்ணத்தின் புகைப்படங்களையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பின்புதான், தான் வெறும் கிண்ணத்தை வாங்கவில்லை அரிய வகை பொருளை வாங்கியுள்ளதாக உணர்ந்துள்ளார்.

மேலும் சோத்பே நிறுவனத்தில் பணிபுரியும் சீன கலைப்பொருள் நிபுணர்களான மேக்டீர் (Angela McAteer) மற்றும் ஹேங் இன் (Hang Yin)ஆகியோர் கிண்ணத்தின் வேலைப்பாடுகளையும், ஓவியத்தையும் பார்த்து வியந்து அதனை குறித்து நீண்ட ஆராய்ச்சிக்கு பின் சீனாவில் ஆட்சி செய்த 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிங் வம்சத்தைச் சேர்ந்த கிண்ணம் என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த கிண்ணமானது 1402 முதல் 1424ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த, மிங் வம்சத்தின் மூன்றாம் பேரரசர் யாங்கிள் (Yongle) இந்த கிண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தவகை கிண்ணங்கள் தற்போது புழக்கத்தில் இல்லாத சமயத்தில் தற்போது கண்டறியப்பட்ட நிகழ்வு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான கிண்ணம் லண்டன் அருங்காட்சியகத்தில் இரண்டு இருப்பதாகவும், தைவானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் இருப்பதாகவும் கூறினார். மற்றொன்று ஈரானில், தெஹ்ரான் அருங்காட்சியகத்தில் உள்ளதாக மெக்டீர் கூறியுள்ளார்.

வரும் மார்ச் 17ம் தேதி சீனாவைச் சேர்ந்த அரியவகை கலைப்பொருளான கோபால்ட் ஓவிய கிண்ணம், சோத்பே நிறுவனத்தின் சார்பில் ஏலம் விடப்பட உள்ளதாக மேக்டீர் தெரிவித்துள்ளார். இந்த அரியவகை கலைப்பொருட்களில் ஒன்றான இந்த கிண்ணம் ஏறத்தாழ 3 முதல் 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.