பவுன்ஸ் பாக் லோன் எடுத்து வீடு வாங்கிய தமிழரின் வீடு பறி முதல் ! தமிழர்களே உஷார் !

பிரித்தானியாவின் திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக், மிக கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்க ஆரம்பித்துள்ளார் . பிரிட்டனில் ஆசிய சமூகத்தை சேர்ந்த பலரே முறைகேடாக பவுன்ஸ் பாக் லோனை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில். தானும் ஒரு ஆசிய நாட்டவர் என்ற வகையில் ரிஷி சுண்ணக்,  தன் மீது பழி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சுமார் 1,000 துப்பறியும் நபர்களை நியமித்துள்ளார்.

ஏற்கனவே இவ்வாறு 50,000 ஆயிரம் கடன் எடுத்து வீடு ஒன்றை வாங்கிய தமிழர் ஒருவரின் வீடு , கடந்த மாதம் மோட்கேஜ் வழங்கிய வங்கியால்  பறி முதல் செய்யப்பட்டுள்ளது என்பது அதிர்சி தரும் தகவல். குறித்த தமிழர் தனக்கு நடந்த விடையத்தை எமது இணையத்தோடு பகிர்ந்துள்ளார். எனினும் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. டிப்பாசிட் காசை எப்படி போட்டீர்கள் ? அதற்கான ஆதாரத்தை காட்டுமாறு சிலருக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. எனவே ஜாக்கிரதை.

பவுன்ஸ் பாக் லோனை எடுத்து, வேறு வேலைகளுக்காக செலவிட்ட நபர்கள். வீடு வாங்கிய நபர்கள் மற்றும் வியாபாரத்தில் அந்த பணத்தை செலவு செய்யாமல்,  வேறு நாடுகளுக்கு காசை மாற்றி வைப்பில் இட்ட நபர்கள் என்று பலரை வேட்டையாட புறப்பட்டுள்ளார் திறைசேரி அமைச்சர்.

பல இந்தியர்கள் குறித்த 50,000 ஆயிரம் பவுண்டுகளை எடுத்து, அதனை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பில் இட்டு வட்டி சம்பாதித்து வருகிறார்கள். வீடு வாங்கிய தமிழர்களின் கவனத்திற்கு, பவுன்ஸ் பாக் லோனை எடுத்து ஏன் வீடு வாங்கினீகள் என்று கேட்டால், குறித்த வீட்டை நான் எனது வியாபார ஸ்தலாம பாவிக்கிறேன் என்று காட்டினால் எவராலும் எதனையும் பேச முடியாது…  மேலும் உங்கள் கணக்காளர்(அக்கவுண்டன்) பேசி, தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். வருமுன் காப்போம்.