அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த கொரோனா ஊசியை தடுத்து நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !

அவுஸ்திரேலியாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் இருந்து செல்ல தயாராக இருந்த 2 லட்சத்தி 50,000 ஆயிரம் தடுப்பூசிகளை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். தனது நாடுகளில் ஊசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கூறி வருகிறது. இன் நிலையில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து, தடுப்பு மருந்தை தருவதாக வாக்கு கொடுத்த மருந்து கம்பெனிகள் தலையில் கை வைக்கும் நிலை தோன்றியுள்ளது.

முன்னர் பிரித்தானிய தயாரிப்பான அஸ்ரா செனிக்காவை(ஆக்ஸ்பேட்) தாம் பாவிக்கப் போவது இல்லை என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்தார்கள். அனால் தற்போது அதனை பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும் சொல்லப் போனால் மொடரீனா மற்றும் பைஃசர் போன்ற தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்ட பல முதியவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன் நிலையில் 2 லசத்தி 50,000 ஆயிரம் ஆக்ஸ்பேட் தயாரிப்பான அஸ்ரா செனிக்காவை தான் தற்போது அவுஸ்திரேலியா செல்ல விடாமல் ஐரோப்பிய ஒன்றியம் தடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.