இன்றுவரை பயந்து சாகும் இலங்கை வான் படை- அவர்கள் வைத்திருக்கும் அதி நவீன துப்பாக்கி இதுதான் !

இலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும் திரும்பிப் பார்த்துள்ளனர். இது Digital Eagle Portable drone jammer என அழைக்கப்படும். இது துப்பாக்கி சண்டைக்கு பயன்படுத்தப்படும் சன்னங்கள் பறக்கும் துப்பாக்கி அல்ல எனவும்.

அது டிஜிட்டல் முறையில் எதிரிகளின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தும் திறன் கொண்ட துப்பாக்கி என்றும் அறியப்படுகிறது. இன்றுவரை இலங்கை விமான நிலையத்தை ஒரு புலிகளின் ஆளில்லா விமானம் வந்து தாக்கும் என்ற அச்சம் சிங்களவர் மத்தில் காணப்படுகிறது. இந்த அளவு பயத்தில் இருக்கும் இலங்கை அரசு, அடிக்கடி புலிகளை வென்றுவிட்டோம் என்று வெட்டி வீராப்பு பேசுவதே வழக்கமாகிவிட்டது.