முடியாது சார்…! ‘கண்டிப்பா டைவர்ஸ் வேணும்…’ ‘கல்யாணத்துக்கு முன்னாடியும் சொல்லல…’ ‘அப்புறமும் சொல்லல…’ – ஒரு மனுஷனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்…!

உத்திரபிரதேசத்தில் தன் கணவர் வழுக்கை என்பது தெரிந்த பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதில் வழக்குப்பதிவு செய்த பெண் ஒருவர், தன் கணவர் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் தனக்கு முடி இல்லாததை மறைத்து வந்ததாக கூறி கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கித்தருமாறு கோரியுள்ளார்.

வழக்கு தொடர்ந்த பெண், தனக்கும், தன் கணவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி பல மாதங்கள் கழித்து தான் கணவரின் வழுக்கை குறித்து அறிந்ததாகவும் கூறியுள்ளார். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கில், பலக்கட்டமாக ஆலோசனை நடந்திருந்தாலும், அந்த பெண் விவாகரத்து வேண்டும் என உறுதியாக கூறிவருகிறார்.