சிங்கள மனைவியின் ஆபாச படங்களை கணவனிற்கே அனுப்பிய கள்ளக்காதலன் கொலை!

நாரம்மல – பஹமுன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளின் மீது காரால் மோதியதுடன், ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின்னர், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளார். மாற்றான் மனைவியுடனான காதலால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த சந்தேக நபர், ஒரு பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரன்பாட்டை அடுத்து, அந்தப் பெண்ணை பழி வாங்க. அவரது கணவருக்கு தானும் அவரது மனைவியும் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களை அனுப்பி வெறுப்பேத்தி உள்ளார். இதனால் இருவருக்குமிடையில் தொடர்ந்து தொலைபேசியில் வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது. முடிந்தால் நேருக்குநேர் சந்தித்து பார் என இரு தரப்பும் சவால் விட்டதை தொடர்ந்து, நேற்று முந்தினம் மாலை 4.30 மணியளவில் இரு தரப்பும் நேரில் சந்தித்துள்ளது.

கள்ளக் காதலன் இன்னும் இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். மற்றையவர் காரில் வந்தார். ரம்பேவ- நரம்மல வீதியின் பஹமுன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை, காரில் வந்தவர் மோதித்தள்ளினார். அவர்கள் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய நபர், தனது மனைவியுடன் காதல் தொடர்பிலிருந்தவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்தார். சம்பவத்தை பார்த்த 2 நண்பர்களும் தலை தெறிக்க ஓடி மறைந்து விட்டார்கள்.

பின்னர் கணவர் குறித்த கூரிய ஆயுதத்தை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்று தானாகவே சரணடைந்தார்.