பிரித்தானியாவில் கொவிட்௧9 தொற்றினால் 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என்ற அதிர்ச்சி தகவல் !

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்௧9) பெருந் தொற்றினால், 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 42இலட்சத்து ஆயிரத்து 358பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்௧9 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 025பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 573பேர் பாதிக்கப்பட்டதோடு 242பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது இலட்சத்து 80ஆயிரத்து 769பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 647பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 30இலட்சத்து 96ஆயிரத்து 564பேர் பூரண குணமடைந்துள்ளனர்.