E484K கொடுமையான வைரஸோடு எஸ்கேப் ஆன நபர்: குரைடனில் அவர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது !

E484K என்று அழைக்கப்படும் பிரேசில் மற்றும் தென்னாபிரிக்க வைரசுக்கு பிறந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று லண்டனில் 6 பேரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உள்ள உருமாறிய வைரசுகளில் மிகக் கொடுமையான வைரஸ் இது என்று கூறப்படுகிறது. காரணம் இவை உடலில் சென்றால், எங்கள் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை தூண்டப்பட மாடாது. அவை ஒளித்து திரியும் தன்மை கொண்டவை.

எமது ரத்தத்தில் அலைந்து திரியும் T செல்களோ இல்லை பாதுகாப்பு செல்களோ இந்த வைரஸை இனம் காணாது. அதனால் வைரஸ் பல்கிப் பெருகும். பெரும் அளவில் பெருகிய பின்னரே எமது உடல் இனம் காணும். ஆனால் அந்த வேளை அது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். இதனால் எமது உடலால் சண்டையிட முடியாத நிலை தோன்றி மரணம் நிகழும். இந்த வரைஸ் தொற்று உள்ள 7 பேர் லண்டனுக்குள் விமானம் மூலம் வந்துள்ளார்கள்.

இவர்களில் 6 பேரை இனம் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் ஒரு நபர் மட்டும் தன்னுடைய தொடர்பு இலக்கத்தை சரியாக கொடுக்காமல் சென்றுவிட்டார். இதனால் இன் நபரை தேடி நாடு தழுவிய ரீதியில் பெரும் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில். அவர் தானாகவே முன் வந்து , குரைடனில் தான் இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து 9 மாநகரங்களை, சுற்றி சுகாதார பணியாளர்கள் மக்களை பரிசோதனை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.