டேட்டிங் ஆப்பில் மூலம் 16.5 லட்சம் இழந்தேன்: இளைஞரளித்த புகார்.. மனைவியை காட்டி ஏமாற்றியுள்ளார்கள்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனிஷ் குப்தா MENX HER என்ற இணையதளம் மூலம் 16,50,000 ஆயிரம் ரூபாய் இழந்ததாக புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தது. திபான்க்ர் காஸ்னிவாஸ், யாசிம் கான் ரசூல் பெக் என்ற இருவர் ஆண்களைக் குறிவைத்து டேட்டிங் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணையின்போது, மும்பை தனிப்படை போலீசார் டேட்டிங் மோசடிக் கும்பலை மற்றொரு வழக்கில் கைது செய்திருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஏற்கெனவே, சட்டவிரோதமாக ஆபாச படங்களை தயாரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை போலீசார் மும்பைக்கு சென்று சம்பந்தப்பட்ட கணவன் மனைவி இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மோசடிக் கும்பலின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடங்கியுள்ளனர்.