பறந்துகொண்டிருந்த விமானத்தை கடத்த உள்ளே இருந்த பயங்கரவாதி; திக் திக் நிமிடங்கள்..

ஈரானின் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சொந்தமான ஃபோக்கர் 100 விமானம் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து மஷாத் நோக்கிச் செல்லவிருந்த பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு 10.22 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்டுச் சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் இருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஈரான் புரட்சிகர காவல் படைக்குத் தகவல் அளித்ததனர். இதையடுத்து, விமானம் இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

மேலும், அந்த நபரை அதிகாரிகள் விசாரித்தபோது விமானத்தைத் திசைதிருப்பவும், கடத்த முயன்றாகவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்த முயன்றதாக கூறப்படும் நபர் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.