ஜெயம்ரவி மனைவியிடம் போதையில் சண்டை போட்ட தனுஷ்.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமல்லாமல் எல்லா சினிமா வட்டாரங்களிலும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. அதேபோல் அவ்வப்போது பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்துவதோடு, சில புகைப்படங்கள் சர்ச்சையையும் கிளப்பி விடுவது வழக்கம்.

அதேபோல் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பி ரசிகர்களை திக்குமுக்காட செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் குடிபோதையில் சண்டை விடுவது போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தனுஷ். கோலிவுட்டில் ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கை தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அபாரமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் தற்போது நடிகர் தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி மற்றும் ஒரு இளைஞர் ஆகியோருடன் மதுபாட்டில்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ்  கையை முறுக்கிக் கொண்டு ஜெயம்ரவியின் மனைவியுடன்  சண்டைக்கு செல்வதுபோல் நிற்கிறார். மேலும் ஜெயம் ரவியோ அந்த இடத்தை விட்டு எழுந்து செல்வது போல் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இது ஏதாவது படத்தோட காட்சியா? இல்ல நிஜமாக நடந்த சம்பவமா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.