‘தங்க மெடல் வென்ற தல’ … தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் குதிக்கும் ரசிகர்கள்!

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இவர் இல்லையென்றாலும், இவர் பெயரை உச்சரிக்காமல் சமூக வலைத்தளங்கள் இயங்கியதில்லை. அப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் அஜித், வெறும் நடிப்பால் மட்டுமல்ல தனது தனிப்பட்ட பல திறமைகளாலும் ரசிகர்கள் பலரின் மனதில் இடம்பிடித்தவர்.. சூட்டிங்கில் பிஸியாக ஓடி கொண்டிருந்தாலும், தனக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தவதிலும், பங்கேற்பதிலும் தவறுவதில்லை நடிகர் அஜித்..

கொரனோ காரணமாக வீட்டில் முடங்கியிருந்த நடிகர் அஜித், தற்போது ‘வலிமை’ சூட்டிங்கில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்… படப்பிடிப்புடன் தனது பயிற்சியையும் மீண்டும் தொடர்ந்துள்ளார் அஜித்… பைக் ரேஸ், போட்டோகிராபி, சமையல், ஏரோ மாடலிங் என பல துறைகளில் தடம் பதித்த நடிகர் அஜீத், தற்போது துப்பாக்கி சுடுதலிலும் முத்திரை பதித்து வருகிறார்..

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அஜித். சென்னை நகரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில், அஜித் துப்பாக்கி ஏந்தி பயிற்சி எடுக்கும் போட்டோக்கள் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி வைரலானது… மொட்டை தலையுடன் புதிய லுக்கில் கெத்தாக, நடிகர் அஜித் பயிற்சி எடுத்து வந்த போட்டோவை கொண்டாடினார்கள் அஜித் ரசிகர்கள்.

கோவை மற்றும் டெல்லியில் நடந்த பல துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பரிசுகளை பெற்றுள்ள அஜித், தற்போது ரைபில் துப்பாக்கியில் இருந்து சூட்கன் மற்றும் பேரல் கன் துப்பாக்கிகளை இயக்க பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் சைக்கிளில் 3000 கிலோ மீட்டர் மேல் பயணம் செய்து தென்னிந்தியா எல்லைகளை தாண்டி கொல்கத்தா வரை சென்று சென்னை திரும்பி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அஜித்… அடுத்தகட்டமாக சைக்கிளிலேயே இந்திய எல்லைகளை கடந்து, சர்வதேச ட்ரிப்பாக மியான்மர் வரை சென்று திரும்ப இருப்பதாக தனது நெருங்கிய வட்டாரங்களிடம் தெரிவித்திருந்தார் அஜித்…

சினிமாவில் மட்டுமல்லாமல் , எனக்கு பிடித்த மற்ற பல விஷயங்களிலும் இனி கவனம் செலுத்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார் அஜித்.. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்… அதில் தற்போது தங்க மெடல் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தல அஜித்…

‘வலிமை’ அப்டேட்க்காக பல மாதங்களாக காத்து கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த செய்து ஸ்பெஷலாக அமைந்துள்ளது… தொடர்ந்து ‘வலிமை’ அப்டேட் கேட்டு நச்சரித்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, காட்டமான அறிக்கை ஒன்றை பதிலாக தந்திருந்தார் நடிகர் அஜீத்… இதனால் சைலண்ட் மூடுக்கு சென்ற அஜித் ரசிகர்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் கெத்து காட்ட தொடங்கியுள்ளனர்.