கீர்த்தி சுரேஷ் உடம்பை கண்டமேனிக்க விமர்சித்த ஸ்ரீ ரெட்டி.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

பொதுவாகவே திரையுலக நட்சத்திரங்களில் ஒரு சிலர், மக்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக சர்ச்சைக்குரிய ஏதாவது ஒன்றை செய்வார்கள். உதாரணமாக, நடிகைகள் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது அல்லது மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பது.

அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகையின் உடல் குறித்து விமர்சிப்பதன் மூலம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளா. பொதுவாகவே நடிகை ஸ்ரீ ரெட்டி மற்றவர்களை குறை கூறுவதே வழக்கமாக வைத்துள்ளார். இவரின் சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுவது மட்டுமல்லாமல் சில நடிகர்கள் மீதும் பாலியல் தொடர்பான புகார்களை கூறி பிரபலமானார்.

அத்துடன் அண்மையில் இவர், மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு, பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஏனென்றால் சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும்  ஒரு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்தவர்கள் நடிகை ஸ்ரீ ரெட்டியை அடையாளம் கண்டுகொண்டு, அவருடன் புகைப்படம் எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொள்வது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், ஸ்ரீ ரெட்டியுடன் இருப்பது கீர்த்தி சுரேஷ் தான் என்பதை யாரும் சரியாக கவனிக்க வில்லையாம். ஏனெனில் கீர்த்தி சுரேஷின் உடலை பார்த்தால் நோயாளியின் உடல் போல் இருக்கிறது, அதனால்தான் கீர்த்தி சுரேஷை அங்கு யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

அதுமட்டுமின்றி நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்றதற்கு, படத்தின் இயக்குநர்தான் காரணம், கீர்த்தி சுரேஷின் நடிப்பு திறமையால் அல்ல.

ஆனால் தற்போது சாய்பல்லவி தனது திறமையான நடிப்பை காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. எனவே இவருடைய இந்த சர்ச்சைக்குரிய பதிவால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.