யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – கடுமையாக எச்சரிக்கை செய்த தேரர்!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாக்கி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளது. இலங்கையின் கட்சி அரசியலில் இந்தியா செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தால் பல பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா என்ற கட்சி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என தெரிவித்துள்ள பௌத்த மதகுரு அவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்புக்களை தடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.