செம்மணிச் சுடலைக்கு அருகில் ஆபத்தான வெடிமருந்து பொதியாம் குவிக்கப்படும் அதிரடிப்படை !

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின், அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில், ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதியை எடுத்தார்களா ? இல்லை அது உண்மையில் வெடி பொருள் தானா என்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். Sri Lanka