நான் தற்கொலைக்கு முயன்றேன்… என் பிள்ளை எவ்வளவு கறுப்பாக இருக்கும் என்று மாளிகையில் கணக்குப் போட்டார்கள்

பிரித்தானிய 2ம் இளவரசர் ஹரியை திருமணம் செய்த, மெகான் மார்கிளின் அம்மா ஒரு ஆபிரிக்க நாட்டவர். அப்பா வெள்ளை இனத்தை சார்ந்தவர். இன் நிலையில் தான் பிரித்தானியாவில் 5 மாத கர்பிணியாக இருந்தவேளை தற்கொலைக்கு முயன்றேன் என்றும். இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன்,  தன்னை பல தடவை கண் கலங்க வைத்துள்ளார் என்றும் TV நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் மெகான்.

தனது பிள்ளை எந்த அளவு கறுப்பாக பிறக்கப் போகிறது என்று, பக்கிங்ஹாம் மாளிகையில் பலர் கேலி செய்ததாகவும். இதனை ஒரு விவாதப் பொருளாக எடுத்து பேசி, தன்னை கறுப்பின நபர் என்று கேலி செய்ததாகவும் மெகான் மார்கிள் பெரும் குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார். ஓபரா நடத்தும் பிரத்தியேக TV நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து பேசி வரும் அவர், பிரித்தானிய அரச குடும்பத்தின் மீது பல பழிகளை போட்டு வருகிறார்.

சிலர் இதனை அமெரிக்க ஹாலிவுட் பிரபலங்கள் இப்படி தான், புகழ் தேடிக் கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் இதனை நம்பவில்லை. இன்னும் சிலர் பிரித்தானிய அரச குடும்பத்தினர் இன்று வரை நிற வேறுபாடுகளை பார்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இதில் யார் சொல்வது உண்மை ? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.