விவாகரத்துக்குப் பின் சந்தோசமாக இருக்கிறேன்.. மாலத்தீவிலிருந்து டிடி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த சேனலுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றே கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி பா பாண்டி, சர்வம் தாளமயம் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் டிடி.

பொதுவாக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு செம ஜாலியாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ள டிடி, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் டிடி.

அந்த வீடியோவில், தனது 36 வயதில் விவாகரத்து ஆகியும் தனிமையில், தான் ஆனந்தமாக இருப்பதாகவும், அதே சமயம் வலிமையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.   அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வித்தியாசமான பாதையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே அவர் அவரின் பாதையை தேர்வு செய்து, அவ்வழியில் சென்று ஆனந்தமாக வாழும்படியும் கூறியுள்ளார்.

அவ்வாறு வாழ்வதினால் அனைவருக்கும் சந்தோஷம் கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அனைத்து மகளிருக்கும் தனது ‘மகளிர் தின’ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் திவ்யதர்ஷினி.