பொலிசாரால் தேடப்பட்ட ஈழத் தமிழ் இளைஞர் லக்ஸ்மன் திடீரென கைது: தாக்குதல் சம்பவத்தோடு தொடர்பு ?

தாக்குதல் சம்பவம் ஒன்றில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லக்ஸ்மன் சிவயோகன் என்ற இளைஞர், பொலிசார் பிடியில் இருந்து தப்பியோடி மறைந்து வாழ்ந்து வந்த நிலையில். குறித்த ஈழத் தமிழ் இளைஞரை கைது செய்ய கனடா பொலிசார் பொது மக்களின் உதவியை நாடி இருந்தார்கள். மேலும் கனடா பொலிசார் லக்ஸ்மனின் புகைப்படத்தை வெளியிட்டும் இருந்தார்கள். இந்த தீவிர தேடுதலை அடுத்து அவர் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கனடாவில் ரொறண்டோ நகரில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.