‘சுத்தி வளைச்சிட்டாங்க…’ ‘இனி கையில வச்சுருந்தா சேஃப் இல்ல…’ – அதோட விலைய கேட்டா தலையே சுத்திடுச்சு…!

லட்சத்தீவு பகுதியில் சுமார் 2,100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கை இருந்து இந்திய கடலோரப் பகுதிகளுக்கு சில மீனவர் படகுகள் சுற்றுவதை கடலோர காவல் ரோந்துப் படையினர் கண்காணித்துள்ளனர். சந்தேகமடைந்த கடலோரப் படையினர் அங்கிருந்த 3 படகுகளை சுற்றிவளைத்துள்ளனர்.

அதே நேரத்தில் சில வெளிநாட்டு கப்பல்களும் அப்பகுதியில் சுற்றி வருவதை கவனித்த கடலோரப் படையினர் மீனவர் படகுகளை விசாரித்த போது சுமார் 260 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை கடலில் வீசியெறிந்தனர்.

மேலும் 260 கிலோ போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.2100 கோடி என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.