ஆஞ்ச்… பூஞ்ச்’!.. கபடி ரெய்டு சென்று கலக்கிய ‘பிரபல’ நடிகை.. ‘செம’ வைரல்..!

இளைஞர்களுடன் நடிகை ரோஜா கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த இவர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் ரோஜா நடித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை ரோஜா குறைத்துக் கொண்டார். இதன்பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கிறார்.

இந்நிலையில் நகரி பகுதியில் நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க ரோஜா சென்றிருந்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அங்கிருந்த இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும், அப்பகுதி மக்களும் உற்சாகம் அடைந்தனர்.

https://www.instagram.com/andradam4u/?utm_source=ig_embed