இறுதியாக மௌனத்தை கலைத்த மகாராணி: தனியாக வாருங்கள் பதில் சொல்கிறோம் என்றார் !

கடந்த ஒரு வார காலமாக பிரித்தானியாவை உலுக்கும் செய்தியாக உள்ளது மெகான் மற்றும் ஹரி ஆகியோர் வழங்கிய TV நிகழ்ச்சி. அதில் ஒட்டு மொத்த அரச குடும்பத்தைப் பற்றி அவர்கள் குறை கூறியுள்ளதோடு. அரச குடும்ப அங்கத்தவர்கள் நிற வெறிபிடித்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்கள். இதுவரை காலமும் மெளனம் காத்த பிரித்தானியா மகாராணி, சற்று முன்னர் அவரது பெரும் மெளனத்தை கலைத்தார். அவர் அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார்.

அதில் ஹரி மற்றும் மெகான் மார்கள் தம்பதிகள், மாளிகையில் சில சங்கடங்களை எதிர்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அது எல்லோருக்கும் ஏற்படும் பொதுவான சங்கடங்கள் தான். இங்கே கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சில மரபு முறை வழிமுறைகள் உள்ளது. அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஹரி மற்றும் மெகான் தம்பதிகளின் பிள்ளை, எவ்வளவு கறுப்பாக பிறக்கும் என்று சிலர் கணக்கு போட்டதாக கூறப்படும் செய்தி குறித்து நான் அதிக கவனம் செலுத்தியுள்ளேன்.   Queen : whole family is saddened’ to hear of couple’s ‘challenging few years’ – but allegations of racism will be addressed ‘privately’.

இது தொடர்பாக ஆராய்ந்து நாம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிக்கை ஒன்றை சம்ர்பிக்க உள்ளோம் என்று கூறி, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனூடாக இது எமது சொந்த குடும்பப் பிரச்சனை. இதில் வெளி ஆட்கள் தலையிட்டு குளிர்காயவேண்டாம், மேலும் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பதனை நாசுக்காக மகாராணியார் கூறியுள்ளார். இதற்கு மேல் சென்று மேலும் ஏதாவது குற்றஞ்சாட்ட முனைந்தால், அது எடுபடாமல் போகும் அளவு மகாராணியாரின் அறிக்கை உள்ளது. என்ன நடக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.