ராணுவத்தை பழி தீர்க்க புலம் பெயர் தமிழர்கள் முயற்ச்சி செய்கிறார்கள்- அரசாங்கமே காப்பாற்ற வேண்டும் !

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், ஸ்ரீலங்கா ராணுவத்தை பழி தீர்க்க நினைக்கிறார்கள் என்று, இலங்கை ஜெனரல் சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை அமைப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழர்கள் இலங்கை ராணுவத்தை குறிவைத்துள்ளார்கள் என்றும். இதில் இருந்து கோட்டபாய அரசே இலங்கை ராணுவத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க தற்போது கொழும்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரிகள், ரகசியமாக சில தமிழர் தரப்பையும் சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புகள் உத்தியோக பற்றற்ற முறையில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா அமெரிக்காவுக்கு கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.