நாடு தழுவிய ரீதியில் 2% சத விகித செல்வாக்கை இழந்தார் மகாராணியார்- மக்கள் தொடர்ந்தும் ஆதரவு !

மெகான் மார்கிள் மற்றும் ஹரி ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பம் மீது தொடுத்துள்ள நிற வெறிப் போர் காரணமாக, பிரித்தானிய மகாராணியின் செல்வாக்கு 2% விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது. மேலும் அரச குடும்ப அங்கத்தவர்களில் செல்வாக்கில் வீழ்ச்சி கண்ட நபர்கள் இதோ. அண்ணா வில்லியம் 7% விகிதத்தால் மக்கள் செல்வாக்கில் இருந்து வீழ்ச்சி, அவரது மனைவி கேட் மிடில்டன் 8% சத விகித வீழ்ச்சி, ஹரியின் அப்பா சார்ளஸ் 13% சத வீழ்ச்சி, அத்தோடு யானை தன் தலையில் மண்ணை வாரிப் போடுவது போல, மெகான் மார்கிள் 6 சத விகிதத்தாலும் ஹரி 15 சத விகிதத்தாலும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை இழந்துள்ளார்.

இது போக மகாராணியார் 2 சத விகிதத்தை இழந்துள்ள நிலையில். அவரது கணவர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நிலையில், அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் 1 சத விகிதத்தால் அதிகரித்துள்ளது. இதேவேளை இளவரசர் சார்ளஸ்சின் இரண்டாவது மனைவி கமீலா பார்கரின் செல்வாக்கு என்றும் இல்லாதவாறு 9 சத விகிதத்தால் அதிகரித்துள்ளது. அவர் செய்யும் தொண்டுகளே இதற்கு காரணம். முன்னர் டயானாவின் இடத்தை அவர் பிடித்து விட்டார் என்று மக்கள் அவர் மீது வெறுப்பாக இருந்தார்கள். ஆனால் தனது நற்பணிகளால் அவர் மக்கள் மனதை வென்றுள்ளார்.

இன் நிலையில் முழு அரச குடும்பமுமே பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் ஹரி மற்றும் மெகான் மார்கிள் ஆகியோரின் அரச குடும்ப பட்டங்களை பறித்து, கொடுக்கப்படும் அரச மாணியங்களை நிறுத்தி அவர்களை சாதாரண மனிதர்களாக ஆக்க வேண்டும் என்று பலர் மகாராணிக்கு பரிந்துரை செய்துள்ளதோடு. பிரித்தானிய மக்களின் 42% சத விகித மக்கள் இதனையே விரும்புகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.