மாப்பிள்ளை ஆகப்போகும் பும்ரா…’ அப்போ பொண்ணு யாருங்க…? அங்க தான் ரசிகர்களுக்கு செம டிவிஸ்ட்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா, முன்னாள் மாடல் அழகியும், பிரபல விளையாட்டு தொலைக்காட்சியின் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவதுடெஸ்ட் தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை. தனது சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக பும்ரா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பும்ராவுக்கும் சஞ்சனாவுக்கும் வரும் மார்ச் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் கோவாவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நெடுநாட்களாகவே பும்ராவின் திருமணம் குறித்து பலவிதமான தகவல்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில், இந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.