குளிரில் தனது கம்பளத்தை மெகானுக்கு கொடுத்த மகாராணி- வளர்த்த கடா மார்பில் பாய்கிறது !

மெகான் மார்கள் ஹரியை திருமணம் செய்து, முதல் தடவையாக அவர்கள் வெளியே சென்றவேளை. காரில் மெகான் மார்கள் மற்றும் மகாராணியார் ஒன்றாக சென்றுள்ளார்கள். அந்த வேளையில் கடும் குளிர் நிலவியது. அது போக ஆடைக்கு மேலே போர்க்கும் கம்பளத்தை மெகான் எடுத்துவரவில்லை. இதனால் தான் அணிந்திருந்த கம்பளத்தை எடுத்து மகாராணி மெகானுக்கு கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகாராணியும் அவரது குடும்பமும் , இன வெறியர்கள் என்றால் மகாராணி ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் ? அதுவும் மிகவும் வயதான அவர் தனது கம்பளத்தை எடுத்து மெகானிடம் கொடுத்துள்ளார். அப்படி பார்கையில், தனது பேரனின் மனைவி என்று மகாராணியார் மிகவும் அன்பாகவும், பண்பாகவுமே மெகானை நடத்தியுள்ளார் என்பது புரிகிறது. ஆனால் காசுக்கு ஆசைப்பட்டு மெகான் மார்கள் இவ்வாறு செய்து விட்டார் என்று பலரும் கருதும் நிலை தற்போது தோன்றியுள்ளது.

சிறு வயதில் இருந்தே 24 மணி நேரமும் மெய்பாதுகாப்பாளர்களோடு ஹரி வளர்ந்து வந்தார். அவர் மெகானை மணம் முடித்து அமெரிக்கா சென்றதும், அவரது பாதுகாப்பு செலவை ஏற்க்க அரச குடும்பம் மறுத்து விட்டது. இதனால் தனது சொந்த பாதுகாப்புக்கு அஞ்சிய ஹரி, எப்படி என்றாலும் அமெரிக்காவில் பெரும் காசை உழைக்க வேண்டும் என்று கருதினார். இதன் ஒரு அங்கம் தான் இந்த TV நிகழ்ச்சி. இதன் மூலமாக அவர் பல மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார்.