தளபதி 65க்கு டைட்டிலுடன் போஸ்டர் வெளியிட்ட ரசிகர்கள்! கொல மாஸ்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அவரது ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். மேலும் கடந்த பொங்கலன்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்  தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீசை குவித்ததோடு திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது.

மேலும்  50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்தப்படம் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், ஜானி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் வெறியர்கள் தளபதி 65 படத்திற்காக வெறித்தனமான செயல் ஒன்றை செய்து இருக்கின்றனராம்.

அது என்னவென்றால் தளபதியின் 65 ஆவது படத்திற்கு ‘டார்கெட்’ என்று டைட்டில் வைத்து அருமையாக எடிட் செய்து, டாப் டக்கரான போஸ்டரை உருவாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருவதோடு,  விஜய் மீது அவரது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பை நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேலும் ‘தளபதி 65’ பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.