‘அடிச்ச அடியில் நொறுங்கிய ஐபோன்’!.. மனுசன் இப்பவே ஐபிஎல்-க்கு வெறித்தனமா ரெடி ஆகுறாரு போல..!

வலைப்பயிற்சியின் போது ஐபோனை அடித்து நொறுக்கிய ஏபி டிவில்லியர்ஸின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஏபி டிவில்லியர்ஸும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி டிவில்லியர்ஸ், ஐபிஎல் போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சார்பாக நீண்ட காலமாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் ஏபி டிவில்லியர்ஸ் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏபி டிவில்லியர்ஸ் அடித்த பந்து ஒன்று அவரது ஐபோனில் பட்டுள்ளது. இதனால் ஐபோன் உடைந்துள்ளதாக ஏபி டிவில்லியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.