பாகுபலி ரேஞ்சுக்கு ஒரு படம்.. சூர்யாவுக்கு கதை சொல்லி அசத்திய எதார்த்த இயக்குனர்.. இணைவார்களா?

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைகளில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும் சூர்யா அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் பாகுபலி ரேஞ்சுக்கு பிரமாண்டமான கதை ஒன்றை கூறியுள்ளாராம்.

பிரமாண்டமான சரித்திரக் கதைகளில் உருவான படங்களில் மிகப்பெரிய வசூலையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் தான் பாகுபலி. இரண்டு பாகங்களாக உருவான பாகுபலி திரைப்படங்கள் 2000 கோடி வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் அதே போன்ற பிரம்மாண்ட கதை ஒன்றை சூர்யாவுக்காக மாங்கு மாங்கு என உருவாக்கி இருக்கிறாராம் எதார்த்த இயக்குனர் வசந்தபாலன். வரலாற்றுக் கதை சூர்யாவுக்கு செட்டாகுமா என யோசிக்க வேண்டாம். ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் ஒரு சில காட்சிகள் அரசராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தபாலன் சொன்ன கதை சூர்யாவுக்கு முழு திருப்தியாக இருப்பதாகவும் விரைவில் இருவரும் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனும் அளவுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். மேலும் இந்த படத்தை சூர்யா சொந்தமாகவே தயாரிக்கலாம் எனவும் யோசித்து வருகிறாராம்.

இது சம்பந்தமாக வசந்தபாலனிடம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு ஆகும் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆனால் தற்போது சூர்யா அடுத்தடுத்து சூர்யா40 படம், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனுடன் ஒரு படம் என வரிசையாக இருப்பதால் இந்த படம் உருவாவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என கூறுகின்றனர்.

மேலும் இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய படங்களை மொத்தமாக முடித்துவிட்டு இந்த படத்தில் தீவிரமாக உள்ளாராம் சூர்யா. பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும் சூர்யா மற்றும் வசந்தபாலன் இணைவார்களா என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.