லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை 2 நிமிடத்தில் களவு போகும் கத்தலட்டிக்- கன்வேட்டர்- ஆயிரம் பவுண்டுகள் நஷ்டம் !

லண்டனில் தற்போது பெரும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகிறது. உங்கள் காரின் அடிப் பகுதியில், காபன் டை ஆக்ஸைட்டை வெளியிடும் பைப் இணைப்பில் உள்ள மிகவும் விலை உயர்ந்த வடி கட்டியை தான் கத்தலட்டிக் கன்வேட்டர் என்று கூறுவோம். இவை £500 பவுண்டுகள் தொடக்கம் சில வேளைகளில் 2,000 பவுண்டுகள் வரை மதிப்பு மிக்கவை. இதனை திருடும் பெரும் கும்பல் ஒன்று லண்டனில் தற்போது செயல்பட்டு வருகிறது.

மேர்சைடிஸ் பென்ஸ், BMW, ஜக்குவார், அவுடி போன்ற விலை உயர்ந்த கார்களின் கன்வேட்டர் மிகவும் விலை உயர்ந்தவை. இதனை குறிவைத்தே இந்த கும்பல் திருடி வருகிறது. கார்களை ஜக் வைத்து உயர்த்தி. தகரத்தை வெட்டும் சிறிய கருவி ஒன்றை பாவித்து 2 நிமிடத்தில் அதனை வெட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள். இதன் காரணத்தால் கார்களில் இந்த கத்தலட்டிக் கன்வேட்டரை வெட்டி எடுக்க முடியாதவாறு, சில பாதுகாப்பு கவசங்களை சில கார் கம்பெனிகள் தற்போது பொருத்தி வருகிறது.

இதற்கு நாம் எக்ஸ்ரா காசு கட்டி செய்து கொள்ள வேண்டும். லண்டனில் ஒரு வீட்டின் முன்னால் நடந்த திருட்டை அவர்களது CCTV ல் பதிவாகியுள்ளது. பாருங்கள் இந்த மின்னல் வேக திருட்டு எப்படி நடக்கிறது என்று. ஜாக்கிரதை தமிழர்களே. இது நாளை உங்கள் கார்களுக்கும் நடக்கலாம். காரை ஸ்டாட் செய்யும் போது ஒரு பெரும் சத்தம் கேட்க்கும். அப்பொழுது தான் நீங்கள் உணருவீர்கள் ஏதோ நடந்து விட்டது என்று.