அதிமுக’ கூட்டணியில் இணைந்த மற்றொரு ‘கட்சி’… ‘ஆறு’ தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக ‘தலைமை’!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

அதிமுக, தங்களது கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல், அந்த இரண்டு கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதையும், அதிமுக பட்டியலிட்டு அளித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த சில தினங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது.

மேலும் ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.