அன்றே கணித்த ‘சூர்யகுமார்’??… “எல்லாம் தெரிஞ்சு தான் அப்பவே இப்டி சொல்லி இருக்காரு போல…” வைரலாகும் ‘கமெண்ட்’!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

suryakumar yadav comments to sanjana ganesan post gone viral

suryakumar yadav comments to sanjana ganesan post gone viral

அதே போல, நாளை தொடங்கவுள்ள டி 20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி, பும்ராவுக்கும், கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இருவர் தரப்பில் இருந்தும் யாரும் வெளியிடவில்லை.

suryakumar yadav comments to sanjana ganesan post gone viral

இதனிடையே, கடந்த சில நாட்களாக, பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் குறித்த தகவல்கள் தான் இணையம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. அது மட்டுமில்லாமல், பும்ரா குறித்து சஞ்சனா பகிர்ந்திருந்த சில பழைய ட்வீட்டும் வைரலாகி இருந்தது.

suryakumar yadav comments to sanjana ganesan post gone viral

இந்நிலையில், அதே போன்று ஒரு ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு, துபாயில் நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்க வேண்டி, சஞ்சனா கணேசன் துபாய் சென்றிருந்தார். அப்போது போட்டி ஆரம்பிக்க இரண்டு நாட்கள் இருந்த போது, சஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன், ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதால் ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

 

இதில் கமெண்ட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், ‘ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்?’ என நக்கலாக கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சஞ்சனா கணேசன், ‘நான் கிரிக்கெட்டிற்கு சப்போர்ட் செய்வேன்’ என தெரிவித்திருந்தார்.

 

suryakumar yadav comments to sanjana ganesan post gone viral

 

மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னுடன் ஆடி வரும் பும்ராவை குறிப்பிட்டு தான், மும்பை அணிக்கு அவர் சப்போர்ட் செய்யவுள்ளார் என்பதை, சூர்யகுமார் யாதவ் அப்படி ஒரு கமெண்ட்டாக நக்கலுடன் குறிப்பிட்டிருந்தார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.