ஈலிங் மற்றும் ஹவுன்சிலோவில் கொரோனா குறையவில்லை- ஏனைய இடங்களில் அரைவாசியாக சரிந்தது !

லண்டன் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை, சரிபாதியாக சரிந்துள்ளது. இதனால் பல இடங்களில் தொற்று விகிதம் சுமார் 50% சத விகிதத்தால் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில். சுமார் 2 இடங்களில் மட்டும் தொற்று அதிகமாக காணப்படுவதாக சுகாதர துறையினர் தெரிவித்துள்ளார்கள். அது தமிழர்கள் அதிகம் வாழும் ஈலிங் மற்றும் ஹவுன்சிலோ ஆகிய இடங்கள் என அறியப்படுகிறது.

குறித்த இடங்களில் 200 பேருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுவதாக தற்போது வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே தமிழர்களே இந்தப் பகுதிகளுக்கு செல்பவர்கள். மற்றும் இந்தப் பகுதிகளில் வாழ்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.