என் படத்தில் சன்னி லியோன் இருக்கணும்.. அடம்பிடிக்கும் 60 வயது தமிழ் நடிகர்

 

நான் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என 60 வயது நடிகர் அடம் பிடித்துக் கொண்டிருப்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக எழுந்துள்ளது.  தமிழ் சினிமாவில் வந்த வாரிசு நடிகர்களில் சிலர் மட்டுமே வெற்றிகளை குவித்துள்ளனர். அந்தவகையில் பழம்பெரும் நடிகர் முத்துராமன் வாரிசாக தமிழ் சினிமாவில் களம் இறங்கி பல வெற்றிகளை குவித்தவர் தான் கார்த்திக்.

தற்போது கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்கும் சினிமாவில் கவனிக்கப்படும் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த கார்த்திக் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.

கார்த்தி நடிக்கும் படத்திற்கு தீ இவன் என பெயர் வைத்துள்ளனர். அதிரடி படமாக உருவாகும் இந்த படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த ஜெயமுருகன் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளாராம்.

கார்த்திக்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து சுகன்யா நடித்து வருகிறார். சமீபத்தில் பொள்ளாச்சியில் 45 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு விரைவில் மும்பை செல்ல உள்ளதாம். இந்நிலையில் சன்னி லியோன் இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடினால் படத்தின் மார்க்கெட் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என கார்த்திக் சிபாரிசு செய்ததாக தெரிகிறது. ஏற்கனவே சன்னி லியோன் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த பாட்டுக்காகவே படம் ஓடியது வேறு கதை.