’சின்ன தல’ ரெய்னாவுடன் சிவாங்கி – வைரலாகும் படம்; எங்கே எடுத்தது தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு கோமாளிகளின் பங்கும் அதிகம். சமையலுடன் சேர்ந்து நகைச்சுவையையும் அள்ளி அள்ளி தரும் இந்நிகழ்ச்சி ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைக்கிறது. இதில் சிவாங்கி குறிப்பிடத் தகுந்தவர். புகழுடன் இணைந்து அவர் செய்யும் ரகளைகள் தான் குக் வித் கோமாளியின் ஹைலைட்.

கார்நாடக இசைப் பாடகர்கள் பின்னி – கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கியும் அடிப்படையில் பாடகி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இவர் தற்போது கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் சிவாங்கி, நிகழ்ச்சியிலிருந்தும் மற்ற நிகழ்வுகளிலிருந்தும் தொடர்ந்து புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இப்போது அவர் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சி.எஸ்.கே ரசிகர்களால் ’சின்ன தல’ என்று அழைக்கப்படும் ரெய்னாவுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக்கின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.