இடையே நடக்கும் போர்’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் அதிரடி..!

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடக்கும் போரில் தர்மமே வெல்லும் என வாழப்பாடியில் நடந்த பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, அதிமுக வேட்பாளர்கள் தேர்வு என்று தலைமைக்கழக அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்குப் பிறகு, இன்று (12.03.2021) மீண்டும் தனது தேர்தல் பரப்புரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

அதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீது திமுக கூறும் எந்த குற்றச்சாட்டிற்கு பதில் கூறமுடியும். இது அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். இதில் தர்மமே வெல்லும் என அவர் கூறினார்.

முன்னதாக இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார மேடைகளில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் நேருக்குநேர் விவாதிக்க தயார் என்று சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.