தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்!

நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த போதே விஜய் இந்தப் படத்தில் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இந்தப் படத்தில் விஜய்க்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. எனவே இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

விஜய் இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் கூர்மையான புத்தியுடனும், வழக்கம் போல சற்று காமெடி கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகிறது.