கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற தகுதியை இழக்கிறார்கள்; மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சி எனும் பெட்டகத்தில் உள்ள அனைத்து ஆடைகளும் தரமானவைதான் என குறிப்பிட்டுள்ளார். அதில் 173 ஆடைகளை மட்டும் இந்த தேர்தல் களத்திற்கான வெற்றிப் பட்டியலுக்கு தயார் செய்துள்ளதாக கூறியுள்ளார். இன்னும் பல தூய்மையான, தரமான உடைளை அடுத்தடுத்த தேர்தல் களங்களில் பயன்படுத்திக் கொள்வேன் என உறுதியளித்துள்ளார். இந்தமுறையே உடுத்தியாக வேண்டும் என பிடிவாதம் பிடிப்பது திமுகவின் இயல்பல்ல என குறிப்பிட்டுள்ளார்.

உனது சுற்று வரும் வரை காத்திரு என்ற அண்ணாவின் கூற்றை அறிந்தவர்கள்தான் திமுகவினர் என்று குறிப்பிட்ட அவர் பிடிவாதம் பிடிப்பவர்களும், நெருக்கடி கொடுப்பவர்களும் கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற தகுதியை இழக்கிறார்கள் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான் இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.