இலங்கையர்களுக்கு இன்று அரிய வாய்ப்பு; இரவு அண்ணாந்து பாருங்கள்!

சர்வதேச விண்வெளி ஓடத்தை இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழைமை) வானில் அவதானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி முதல் இலங்கையர்கள் சர்வதேச விண்வெளி ஓடத்தை வெறுங் கண்களால் அவதானிக்க முடியும்

சர்வதேச விண்வெளி ஓடமானது தென் மேற்கு திசையிலிருந்து – வடகிழக்கு திசைநோக்கி இரவு 07.05 முதல் 07.12 மணிவரையான காலப் பகுதியில் பயணிக்கவுள்ளது.

இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பயணித்த வண்ணம் உள்ளது. பூமியின் புவிஈர்ப்பு சக்திக்கு அமைய அதன் வேகம் மாறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.