இந்த அன்பு செல்லத்திற்கு…’ ஆர்ப்பரித்து கொண்டாடிய மக்கள்… சீமானின் செயல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் நடக்க குறைந்த அளவு நாட்கள் உள்ள சூழ்நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தன் கட்சியை சேர்த்த ஒருவரின் குழந்தையை சீமானிடம் தந்து பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

கையில் குழந்தையை ஏந்தி “இந்த அன்பு செல்லத்திற்கு ஆதித்ய சோழன் என்று பெயர் வைக்கிறேன்” என பெயர் சூட்டினார்.

பெயரை கேட்டதும் அங்கிருந்த கட்சி தொண்டர்கள் ஆர்பரித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் குழந்தையின் உடலில் வெயில் படுகிறது. துணி வைத்து போர்த்துமாறு அக்கறையோடு கேட்டுக்கொண்டார்.