சந்தோஷ் நாரயணன் இசையில் மாஸ் போலீசாக துல்கர் சல்மான்! வைரலாகுது சல்யூட் செகன்ட் லுக் போஸ்டர்

வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் வாயிலாக தமிழக மக்களிடமும் ரீச் உள்ள மனிதர் துல்கர்.

வாரிசு நடிகராகவே இருப்பினும், தனக்கென்று வித்யாசமான கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கேரளா என்ற லிமிட்டை கடந்து, தென்னிந்தியா முழுவதும் தனது ஆதிக்கத்தை இதுவரை செலுத்திவிட்டார் துல்கர் சல்மான். மல்ட்டிப்ளெக்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மலையாள ஹீரோ இவர் தானாம்.

துல்கர் தனது சொந்த நிறுவனம் Wayfarer Films மூலம் தயாரித்து வரும் படம் SALUTE.  மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். டயானா பென்ட்டி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சல்யூட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மான் போலீஸ் கெட்டப்பில் உள்ள செகன்ட் லுக் போஸ்டரையும், அவர் அரவிந்த் கருணாகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். பாபி – சஞ்சய் கதையை ரெடி செய்துள்ளனர். அஸ்லாம் கே புரயில் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.